இந்தியா

இதுவரை 77,000 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தொற்று பாதிப்பு

28th Sep 2020 03:05 PM

ADVERTISEMENT


இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 77 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 401 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 60 லட்சத்தை எட்டியிருக்கும் நிலையில், இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் பாதுகாப்புப் படை வீரர்கள் 76,768 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், பிஎஸ்எஃப், என்எஸ்ஜி உள்ளிட்ட படைகளைச் சேர்ந்த 76,768 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 401 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் கரோனா தொற்று பாதிப்பைப் போலவே மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 129 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். காவலர்கள் உள்பட 12,760 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 77 ஆயிரம் பேரில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 15,318 பேரும் மத்திய ரிசவ் காவல் படையைச் சேர்ந்த 5,427 பேரும் அடங்குவர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT