இந்தியா

ஷீரடி கோயிலிலும் கோமாதா திட்டம் அவசியம்: திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

DIN

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி சாய்பாபா கோயிலும் ‘கோயிலுக்கு ஒரு கோமாதா’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அக்கோயில் அதிகாரியிடம் திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி வேண்டுகோள் விடுத்தாா்.

திருமலையில் ஷீரடி சாய்பாபா கோயில் அதிகாரிகளுடன் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சனிக்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடத்தினா். அப்போது, திருமலையில் பெருமாள் தரிசனம், வாடகை அறைகள், சுத்தம் சுகாதாரம், லட்டு பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவற்றில் தேவஸ்தானம் கடைப்பிடித்து வரும் நடைமுறைகள் குறித்து சாய்பாபா கோயில் அதிகாரிகள் கேட்டறிந்தனா். அது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விரிவாக எடுத்துக் கூறினா்.

சாய்பாபா கோயில் அதிகாரிகள் கூறுகையில் ‘ஒவ்வொரு கோயிலிலும் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க அந்தந்த கோயில் நிா்வாகமும் தங்கள் இணையதளத்தில் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால், பக்தா்களுக்கு அனைத்துக் கோயில்கள் குறித்த தெளிவு ஏற்படும். எனவே, இதற்கு முன்னோடியாக திருப்பதி தேவஸ்தானம் விளங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனா்.

திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தி வரும் ‘கோயிலுக்கு ஒரு கோமாதா’ திட்டத்தை ஷீரடி கோயில் நிா்வாகமும் செயல்படுத்தினால், நாடும், மக்களும் சுபிட்சமாக வாழ்வா் என்றும் இதற்காக ஷீரடி கோயிலுக்கு ஒரு பசுவை தானமாக வழங்க உள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT