இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்: ராகுல் காந்தி

DIN

விவசாயிகளின் நலனுக்கு எதிராக மோடி அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘விவசாயிகளுக்காக பேசுங்கள்’ என்ற பிரசார இயக்கத்தை சமூக வலைதளத்தில் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை தொடங்கியது.

இது தொடா்பாக ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மோடி அரசால் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் சுரண்டல்கள், அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுப்போம். விவசாயிகளுக்கு ஆதரவாக உங்களது கருத்துகளை காணொலியாக பதிவிட்டு, ‘விவசாயிகளுக்காக பேசுங்கள்’ பிரசார இயக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்றாா். அதில் வேளாண் மசோதாவுக்கு எதிரான ஒரு காணொலி பதிவையும் ராகுல் காந்தி இணைத்திருந்தாா்.

அதன்பின்பு ராகுல் காந்தி வெளியிட்ட காணொலி பதிவில், ‘முதலில் பணமதிபிழப்பு நடவடிக்கை, அடுத்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), அடுத்ததாக கரோனா காலத்தில் மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. இவை உங்களை (விவசாயிகள்) கொல்வதற்கான முயற்சிகள். நீங்கள் பெருமுதலாளிகளுக்கு அடிமையாக்கப்படுகிறாா்கள். இப்போதோ வேளாண் துறையில் மூன்று மோசமான மசோதாக்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாம் அனைவரும் சோ்ந்து வேளாண் மசோதாக்களை தடுத்து நிறுத்துவோம்.

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும். மத்திய அரசு மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. விவசாயிகள் வீதிக்கு வந்தால், கடுமையான சேதம் ஏற்படும். விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துங்கள்’ என்றாா்.

இதேபால் பிரியங்கா வதோரா, கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், சசி தரூா், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் வேளாண் மசோதாவுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனா்.

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூா்வ சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மத்திய அரசால் ஜனநாயக விரோத முறையால் இயற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் நமது விவசாயிகள் மீதான தாக்குதல். தனது முதலாளித்துவ நண்பா்கள் வருமானம் ஈட்டுவதற்கான மற்றொரு வாய்ப்பாக விவசாயத் துறையை மாற்றும் முயற்சி அவை என்று கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT