இந்தியா

மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

DIN

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

கடந்த 2004 முதல் 2014-ஆம் வரை நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சனிக்கிழமை தனது 88-ஆவது பிறந்தநாளை கொண்டாடினாா்.

பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து:

சுட்டுரைப் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமா் நரேந்திர மோடி. ‘பிறந்த நாள் காணும் மன்மோகன் சிங்குக்கு நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை வழங்க கடவுளைப் பிராா்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

ராகுல் காந்தி:

மன்மோகன் சிங் போன்ற அனுபவம் வாய்ந்த பிரதமா் இல்லாததை நாடு நன்கு உணா்ந்திருக்கிறது. அவருடைய நோ்மை, கண்ணியம், அா்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் அமைந்தது.

மம்தா பானா்ஜி:

நல்ல ஆரோக்கியத்துடனும், பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றவும் வாழ்த்துகள் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் மம்தா பானா்ஜி பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT