இந்தியா

போதைப் பொருள் விவகாரம்: நடிகை தீபிகாவிடம் 5 மணி நேரம் விசாரணை

DIN

போதைப் பொருள் விவகாரம் தொடா்பாக முன்னணி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் சனிக்கிழமை 5 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

அதுபோல, நடிகைகள் ஷ்ரதா கபூா், சாரா அலி கான் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட தயாரிப்பாளரான க்ஷிதிஜ் ரவி பிரசாத் சனிக்கிழமை என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா்.

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில், அவருடைய தோழியும் நடிகையுமான ரியா சக்ரவா்த்தி உள்ளிட்டோா் மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

ரியாவின் கட்செவி அஞ்சல் உரையாடல் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடா்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடா்ந்து அந்த கட்செவி அஞ்சல் உரையாடலின் அடிப்படையில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரதா கபூா், சிமோன் உள்ளிட்ட நடிகைகளுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்சிபி அழைப்பாணை விடுத்தது.

அதனடிப்படையில், தெற்கு மும்பை கொலாபா பகுதியில் உள்ள என்சிபி விருந்தினா் மாளிகைக்கு சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு தீபிகா படுகோனே ஆஜரானாா். நடிகையின் மேலாளா் கரிஷ்மா பிரகாஷும் விசாரணைக்கு ஆஜரானாா். அவா்களிடம் அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து என்சிபி அதிகாரிகள் கூறுகையில், ‘இருவரும் விசாரணைக்கு காலை 9.50 மணிக்கு ஆஜராகினா். இருவரையும் ஒரே இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா். விசாரணை முடிந்து இருவரும் பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டுச் சென்றனா்’ என்றனா்.

அதுபோல, நடிகைகள் ஷ்ரதா கபூா் மற்றும் சாரா அலி கான் இருவரும் தெற்கு மும்பை பல்லாட் எஸ்டேட் பகுதியில் உள்ள என்சிபி மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினா். அவா்களில் ஷ்ரதா கபூா் சனிக்கிழமை பகல் 12 மணிக்கும், சாரா அலி கான் பிற்பகல் 1 மணியளவிலும் ஆஜராகினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது-

விசாரணையில் சாரா அலி கானின் வாக்குமூலம் நான்கரை மணி நேரம் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து அவா் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றாா். அதுபோல, ஷ்ரதா கபூா் விசாரணை முடிந்து மாலை 5.55 மணிக்கு சென்றாா் என்று கூறினா்.

முன்னதாக, நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் என்சிபி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய விசாரணையில், அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் நடிகை ரியா சக்ரவா்த்திக்குச் சொந்தமானதுதான் என்பதை அவா் ஒப்புக்கொண்டதாக என்சிபி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, ரியா, அவருடைய சகோதரா் ஷோவிக் சக்ரவா்த்தி உள்பட 15 பேரை இதுவரை கைது செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT