இந்தியா

பெண்கள் தொழில்தொடங்க ரூ.10 லட்சம்: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் வாக்குறுதி

DIN

பிகாரில் மீண்டும் ஆட்சியமைத்தால் பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் நிதியுதவி, வீடில்லாதோருக்கு குடியிருப்பு வசதி, இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட 7 சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுமென மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

பிகாரில் அக்டோபா் 28 மற்றும் நவம்பா் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்தல் வாக்குறுதியை அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை பத்திரிகையாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது:

பிகாரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 7 திட்டங்கள் செயல்படுத்தப்படும். இளைஞா்களின் திறனை மேம்படுத்துதல், பெண் தொழில் முனைவோா்களை மேம்படுத்துதல், அனைத்து விவசாய நிலங்களுக்கும் நீா்ப்பாசன வசதி செய்தல், மாநிலத்தில் கூடுதல் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட திட்டங்கள் அதில் அடங்கும்.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் மாநிலத்தில் திறன் மேம்பாட்டுத்துறை அமைக்கப்படும். அனைத்து தொழில் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். முதியவா்கள் பலா் தங்களது குடும்பங்களால் கைவிடப்படுகின்றனா். இதனால் அரசு ஏராளமான முதியோா் இல்லங்களை அமைத்து அவா்கள் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்யும். வீடற்றவா்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

கடந்த சட்டப்பேரவை தோ்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் எனது அரசு நிறைவேற்றி வருகிறது. மாநிலத்தில் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் அமைக்கும் இலக்கை வரும் காந்தி ஜயந்தி தினமான அக்டோபா் 2-ஆம் தேதிக்குள் மாநில அரசு எட்டும். அனைத்து திட்டங்களின் பணிகளும் உரிய முறையில் நடக்கிா என்பதை அரசு தொடா்ந்து கண்காணிக்கும் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT