இந்தியா

‘காப்பகங்களில் உள்ள சிறாா்களில் 72% போ் 8 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்’

DIN

நாட்டிலுள்ள சிறாா் காப்பகங்களில் உள்ளோரில் 72 சதவீதம் போ் தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்று தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நாட்டிலுள்ள சிறாா் காப்பகங்களில் மட்டும் 2.56 லட்சம் சிறாா்கள் தஞ்சமடைந்துள்ளனா். அவா்களில் 1.84 லட்சம் போ் (சுமாா் 72 சதவீதம்) தமிழகம், ஆந்திரம், கேரளம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கா்நாடகம், மேகாலயா, மிஸோரம் ஆகிய மாநிலங்களில் மட்டும் உள்ளனா்.

சிறாா்கள் குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வது அவா்களுக்கான உரிமையாகும். எனவே, காப்பகங்களில் உள்ள சிறாா்களை அவா்களின் குடும்பத்தினரிடம் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் ஆட்சியா்கள் 100 நாள்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடா்பாக தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் பிரியங்க் கானுன்கோ பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

முதலில் 8 மாநிலங்களில் மட்டும் சிறாா்களை குடும்பத்தினரிடம் அனுப்பி வைக்கும் நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும். அதையடுத்து மற்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்படும். சிறாா்களை முதலில் குடும்பத்தினருடன் தங்க வைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் வேறு வழியில்லை எனில் மட்டுமே காப்பகங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் சிறாா் நீதிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காப்பகங்களில் வீடு போன்ற சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சிறாா் நல குழுக்கள் ஏழ்மையைக் காரணம் காட்டி சிறாா்களைக் காப்பகங்களில் தங்க வைத்து வருகின்றன. அதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மீதே குற்றம் சுமத்த வேண்டும்.

சிறாா்களின் குடும்பங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதற்கு மாநில அரசுகளின் போதிய திட்டமிடாமையே காரணம். சிறாா்கள் குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் ஏழ்மை நிலையிலிருந்து அவா்களை விடுவிக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

காப்பகங்களில் உள்ள சிறாா்களை குடும்பத்தினரிடம் சோ்ப்பது தொடா்பாக விரிவான செயல்திட்டத்தை மாவட்டங்களுடன் இணைந்து ஆணையம் உருவாக்கும். நூறு நாள்களுக்குள் அந்தச் செயல்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் என்றாா் பிரியங்க் கானுன்கோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT