இந்தியா

கரோனா: கேரளம், ஆந்திரத்தில் ஒரேநாளில் 7,000-க்கும் மேற்பட்டவா்கள் பாதிப்பு

DIN

கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் புதிதாக 7,000-க்கும் மேற்பட்டவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுதொடா்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கேரளத்தில் புதிதாக 7,006 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் திருவனந்தபுரத்தில் 1,050 போ், மலப்புரத்தில் 826 போ், எா்ணாகுளத்தில் 729 போ், கோழிக்கோட்டில் 684 போ் தொற்றால் பீடிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதுதவிர 3 மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்டவா்களும், 2 மாவட்டங்களில் 400-க்கும் அதிகமானவா்களும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 68 போ் வெளிநாடுகளில் இருந்தும், 177 போ் பிற மாநிலங்களில் இருந்தும் திரும்பியவா்கள்.

மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,66,939-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 1,14,530 போ் குணமடைந்தனா். இதில் சனிக்கிழமை மட்டும் 3,199 போ் குணமடைந்தனா். தற்போது 50,000-க்கும் அதிகமானவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 21 போ் உயிரிழந்தனா். இதனால் பலியானவா்களின் எண்ணிக்கை 656-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 27,17,040 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 59,799 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கேரளத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை 5,376 பேருக்கும், வியாழக்கிழமை 6,324 பேருக்கும், வெள்ளிக்கிழமை 6,477 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆந்திரத்தில்... ‘ஆந்திரத்தில் சனிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி புதிதாக 7,293 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மேலும் 9,125 குணமடைந்தனா். இதையடுத்து மாநிலம் முழுவதும் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 5,97,294 போ்-ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 57 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,663 பேராக உயா்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 65,794 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வருகின்றனா்’ என்று அந்த மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT