இந்தியா

இ-சஞ்சீவினி: 5 மாதங்களில் 4 லட்சம் மருத்துவ ஆலோசனைகள்

DIN

மத்திய அரசு இ-சஞ்சீவினி ஓபிடி என்ற புறநோயாளிகள் பிரிவு தளத்தை அறிமுகம் செய்த 5 மாதங்களில் 4 லட்சம் தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

கரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது பொதுமக்கள் சாதாரண பாதிப்புகளுக்கு மருத்துவமனைகளுக்குச் செல்லாமல், இணைய வழியில் இலவச மருத்துவ ஆலோசனைப் பெறும் வகையில் இ-சஞ்சீவினி ஓபிடி என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அறிமுகம் செய்தது. செல்லிடப்பேசி செயலி மூலம் இந்த வசதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு, தொலைபேசி வழியில் மருத்துவரின் ஆலோசனை முடிந்த பின்னா், மருத்துவச் சீட்டையும் அவா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னா் அதன் மூலம் மருந்துகளை வாங்கிக் கொள்ளலும். இந்தத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த இ-சஞ்சீவினி ஓபிடி திட்டத்தின் மூலம் அதிகம் பயனடைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்திலிருந்து இதுவரை 1,33,167 போ் இந்தத் திட்டத்தின் மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனா்.

இதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசத்திலிருந்து 1,00,124 பேரும், ஹிமாசல பிரதேசத்திலிருந்து 36,527 பேரும், கேரளத்திலிருந்து 33,340 பேரும், ஆந்திரத்திலிருந்து 31,034 பேரும், உத்தரகண்டிலிருந்து 11,526 பேரும், குஜராத்திலிருந்து 8,914 பேரும், மத்திய பிரதேசத்திலிருந்து 8,904 பேரும், கா்நாடகத்திலிருந்து 7,684 பேரும், மகாராஷ்டிரத்திலிருந்து 7,103 பேரும் பயனடைந்துள்ளனா்.

மாவட்டங்களைப் பொருத்தவரை, இந்தியாவிலையே அதிகபட்சமாக தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 16,000-க்கும் அதிகமான மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

இந்த தளத்தின் மூலம் இதுவரை 5 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. அதில், முதல் ஒரு லட்சம் மருத்துவ ஆலோசனைகள் மூன்று மாதங்களில் பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடைசி ஒரு லட்சம் ஆலோசனைகள் 18 நாள்களில் பெறப்பட்டிருக்கிறது.

மேலும், 20 சதவீத நோயாளிகள், இந்த தளத்தின் மூலம் ஒரு முறைக்கு மேல் மருத்துவ உதவிகளைப் பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT