இந்தியா

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.எப்.தாமஸ் காலமானார்

27th Sep 2020 05:34 PM

ADVERTISEMENT

கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.எப்.தாமஸ் இன்று காலமானார். 

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 81 ஆகும். 

சி.எப்.தாமஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிர தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உருவாக முக்கியப் பங்கு வகித்தவர் சி.எப்.தாமஸ். 

இவர் சங்கனாச்சேரி தொகுதியில் 1980-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 9 முறை எம்.எல்.ஏ வாக இருந்து வருகிறார். மேலும 2001 - 2006 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கிராம வளர்ச்சிதுறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். 

ADVERTISEMENT

மறைந்த சி.எப்.தாமஸூக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT