இந்தியா

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

DIN

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து தற்போது  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து இந்த வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 22-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவசர அவசரமாக குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

3 வேளாண் மசோதாக்களையும் திரும்பப்பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வேளாண் மசோதாவிற்கு எதிராக பஞ்சாபில் நான்காவது நாளாக விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

வேளாண் மசோதாக்களை விசாரணைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், 3 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் மூலம் வலியுறுத்தின.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய குடியரசுத் தலைவர் வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அவரது ஒப்புதலைத் தொடர்ந்து மசோதாக்கள் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT