இந்தியா

தில்லியில் இன்று புதிதாக 3,292 பேருக்கு கரோனா

27th Sep 2020 09:54 PM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 3,292 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டதகவலில், இன்று ஒரே நாளில் மொத்தம் 51,416 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் புதிதாக 3,292 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,71,114ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றால் இன்று 42 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5235-ஆக அதிகரித்தது. மொத்தம் 29,228 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 

கரோனாவிலிருந்து இதுவரை 2,36,651 குணமடைந்தனர். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,380ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT