இந்தியா

பிகார் காவல் துறை முன்னாள் தலைவர் ஜேடியுவில் இணைந்தார்

DIN


பிகார் காவல் துறை முன்னாள் தலைவர் குப்தேஷ்வர் பாண்டே ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இணைந்தார்.

பிகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் முன்னணியில் அவர் கட்சியில் இணைந்தார்.

இதுபற்றி குப்தேஷ்வர் தெரிவித்ததாவது:

"நிதிஷ் குமார் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து, மிகுந்த அன்புடன் கட்சி உறுப்பினர் பொறுப்பை வழங்கினார். நான் அதை ஏற்றுக்கொண்டேன். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. என்னிடம் சொல்வதை நான் செய்வேன்" என்றார்.

பிகாரில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக அவர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

இதனால், அவர் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அவர் கட்சியில் இணைந்துள்ளார். வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் அவரது சொந்த ஊரில் ஜேடியு சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இவர், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நிதிஷ் குமாருக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT