இந்தியா

சத்தீஸ்கர்: பத்திரிகையாளர்களை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள்

27th Sep 2020 05:16 PM

ADVERTISEMENT

சத்தீஸ்கர் மாநிலத்தில் மணல் கொள்ளையை எதிர்த்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை காங்கிரஸ் பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் பகுதியில் மணல்கொள்ளை நடைபெறுவதை கண்டித்து குழுவாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கமல் சுக்லா என்பவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று காங்கிரஸ் பிரமுகர்கள் மிரட்டியுள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த இந்த செயலை காவல்துறையினரும் தடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் காவல்நிலையத்தின் வெளியே வந்தபோது காங்கிரஸ் பிரமுகரான கஃபார் மேனன், கணேஷ் திவேரி, சதாப் கான் ஆகியோர் பத்திரிகையாளரை கடுமையாக தாக்கி, துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

இதனைத் தடுக்க வந்த சக பத்திரிகையாளர் இருவரையும் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளனர். இது குறித்து ஆளுநர் அனுசுயா யுகேவிற்கு கடிதம் மூலம் பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகரகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT