இந்தியா

ஆந்திரம், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம்

27th Sep 2020 10:09 PM

ADVERTISEMENT

ஆந்திரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஆந்திரத்தில் 6,923 பேருக்கும், கர்நாடகத்தில் 9,543 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 6,923 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,75,674 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 45 பேர் பலியானார்கள்.

இதனால் கரோனாவால் பலியானாவர்களின் எண்ணிக்கை 5,708 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 7796 பேர் குணமடைந்தனர். இதையடுத்து ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 6,05,090ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 64,876 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

இதுகுறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று மேலும் 9,543 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,75,566 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,582 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 6,522 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,62,241 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,04,724 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT