இந்தியா

பிரசவத்திற்கு அழைத்துச்சென்ற கார் விபத்து: கர்ப்பிணி உட்பட 7 பேர் பலி

27th Sep 2020 08:56 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் பிரசவத்திற்காக கர்ப்பிணியை அழைத்துச்சென்ற கார் விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி உட்பட 7 பேர் பலியானார்கள். 

கர்நாடக மாநிலம், கலாபுரகி மாவட்டம், அலண்ட் நகரைச் சேர்ந்தவர் இஃப்ரானா பேஹம் (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை, குடும்பத்தினர் கார் ஒன்றின் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இவர்கள் சென்ற கார் சவாலகி எனும் கிராமம் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் காரும், லாரியும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் கர்ப்பிணி உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவத்திற்காக காரில் சென்ற கர்ப்பிணி உள்பட 7 பேர் விபத்தில் பலியான சம்பவம் கர்நாடகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

Tags : Karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT