இந்தியா

கரோனா: 10 மாநிலங்களில் மட்டும் 76% குணமடைந்தனர்

DIN

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 10 மாநிலங்களிலிருந்து மட்டும் 76 சதவிகிதத்தினர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 92,043 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் 10 மாநிலங்களில் மட்டும் 76 சதவிகிதத்தினர் குணமடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 23,000 பேர் குணமடைந்தனர். ஆந்திரத்தில் 9.000 பேர் குணமடைந்தனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 1,124 பேர் உயிரிழந்தனர். இதில் 10 மாநிலங்களில் மட்டும் 84 சதவிகிதத்தினர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரத்தில் 430 பேரும் (38%) கர்நாடகத்தில் 86 பேரும், தமிழகத்தில் 85 பேரும் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 88,600 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதில் 10 மாநிலங்களில் மட்டும் 77 சதவிகிதத்தினர் குணமடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரத்தில் 20,000 பேரும், கர்நாடகத்தில் 8000 பேரும், ஆந்திரத்தில் 7000 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT