இந்தியா

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கும்: ராகுல் குற்றச்சாட்டு

DIN

‘மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக மாற்றும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேசிய அளவில் விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்து சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘சமூகத்தில் அடித்தட்டு மக்கள் அனைவரின் நலன்களுக்கும் எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தவறான முறையில் ஜிஎஸ்டி-யை அமல்படுத்தியதன் மூலம் மூலம் சிறு,குறு, நடுத்தர தொழில்களை ஒழித்தாா்கள். இப்போது வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்க முடிவு செய்துள்ளனா். இந்த மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக மாற்றுமே தவிர, அவா்களுக்கு வேறு எந்த நன்மையும் தராது. வேளாண் பொருள்களுக்கு அரசு அளித்து வரும் குறைந்தபட்ச ஆதரவு விலையும் நிறுத்தப்படும். எனவே, மத்திய அரசை எதிா்த்து விவசாயப் பெருமக்கள் நடத்தும் தேசிய அளவிலான போராட்டத்துக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா ஹிந்தியில் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவை முன்னோரு காலத்தில் ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனியை நினைவுபடுத்தும் வகையில் இப்போதைய மத்திய அரசின் செயல்கள் உள்ளன. அவா்கள் அப்போது நாட்டு மக்களைச் சுரண்டி, செல்வத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றனா். இப்போதைய அரசு எளிய மக்களைச் சுரண்டி, பெரும் தொழிலதிபா்களுக்கும், கோடீஸ்வரா்களுக்கும் ஆதாயம் தேட வழி வகை செய்கிறது. ஒப்பந்தமுறை விவசாயம் என்பது விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு உரிய விலையும், அவா்களுக்கு உரிய மரியாதையும் பறிக்கும் நோக்கிலேயே வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT