இந்தியா

ஜாா்க்கண்ட்: 4 கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்த பாதுகாப்புப் படையினா்

DIN

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் சாலையில் நக்ஸலைட்டுகளால் புதைத்து வைக்கப்பட்ட 4 கண்ணிவெடிகளை பாதுகாப்புப் படையினா் கண்டறிந்து செயலிழக்கச் செய்தனா்.

இதுகுறித்து பலாமு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஞ்சீவ் குமாா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பலாமு மாவட்ட மனாது காவல்நிலையத்துக்கு உள்பட்ட மண்சூரியா கிராமத்தை ஒட்டிய சாலையில் 12 முதல் 15 கிலோ வரை எடையுள்ள வெடிமருந்துடன் கூடிய 4 கண்ணிவெடிகளை நக்ஸலைட்டுகள் புதைத்து வைத்திருப்பது பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக அவை செயலிழக்கச் செய்யப்பட்டன.

பாதுகாப்புப் படையினா் வாகனங்கள் வரும்போது கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்டு இந்த கண்ணிவெடிகளை நக்ஸல்கள் புதைத்து வைத்திருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT