இந்தியா

உலக அமைதிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது: ஐ.நா. பொதுச்சபையில் மோடி பேச்சு

26th Sep 2020 06:59 PM

ADVERTISEMENT

ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது ஆண்டு கூட்டம், நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று காரணமாக, பெரும்பாலான உலக நாடுகளின் தலைவா்கள் காணொலி முறையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்றி வருகின்றனா். சில நாட்டுத் தலைவா்களின் விடியோ உரைகள் கூட்ட அரங்கில் திரையிடப்படுகின்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் விடியோ உரை, ஐ.நா. பொதுச் சபையில் உள்ளூா் நேரப்படி காலை 9 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) ஒளிபரப்பானது. அதில், பயங்கரவாதம், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மோடி பேசினார்.

பிரதமர் தனது உரையில்,“ 75 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் அவை பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. 130 கோடி இந்தியர்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதற்காக நான் இந்த சபைக்கு வந்துள்ளேன். ஐநாவின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என்றார்.

மேலும்,“ஐக்கிய நாடுகள் அவை தொடங்கியபோது இருந்ததை விட உலகம் தற்போது மாறுபட்ட காலத்திற்கு வந்துள்ளது. கரோனாவிற்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் அவையின் பங்கு என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் அவை தனது செயல்பாடுகளை மாற்ற வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பிரதமர் மோடி தனது உரையில் ஐக்கிய நாடுகள் அவையின் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளப்படுவதற்காக இந்தியா நீண்டகாலமாக காத்திருக்கிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி தனது உரையில் உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.

Tags : UN
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT