இந்தியா

அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கம்

DIN

அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கிளைப்பிரிவை மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடக்கிவைத்துள்ளார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தை துவக்கி வைத்த பின்னர் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது, ''அசாமில் புதிதாக வேளாண்மைத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு துவங்கியதன் மூலம் அருணாசல், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்படும்.

2050-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடு அதிகரிக்கும். இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையிலும், உணவுப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கத்திலும் அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தியா விளைச்சல் மற்றும் உற்பத்தியில் தற்போது தன்னிறைவு அடைந்த நாடாக மட்டுமல்லாமல் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் வளர்ந்துள்ளது. வளர்ச்சி நோக்கிய செயல்முறைக்கும், முடிவுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கும்பொருட்டு ஜார்கண்ட் மற்றும் அசாமில் புதிய வேளாண் ஆராய்ச்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தால் செய்யப்படும் பசுமைப் புரட்சிகள் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், மனித வள மேம்பாட்டிற்கும் பங்களிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT