இந்தியா

கேரளத்தில் 7 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

DIN


கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7,006 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, கேரளத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,66,939 ஆக உயர்ந்துள்ளது. இதில் 50,000 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,799 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் 21 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 656 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,14,530 பேர் குணமடைந்துள்ளனர். 

புதிதாக தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர்களில் 68 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 177 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 6,668 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,446 பேர் இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை - 5,376
வியாழக்கிழமை - 6,324
வெள்ளிக்கிழமை - 6,477
இன்று (சனிக்கிழமை) - 7,006 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

SCROLL FOR NEXT