இந்தியா

"அமெரிக்கர்களுக்கு ஹெச்-1பி பணிக்கான பயிற்சியளிக்க 15 கோடி டாலர் முதலீடு'

DIN


புதுதில்லி /வாஷிங்டன்: தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஹெச்-1பி பணிகளுக்காக அமெரிக்கர்களுக்கு பயிற்சியளிக்க அந்நாடு 15 கோடி டாலர் முதலீடு செய்யவுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தொழிலாளர் துறை தெரிவித்திருப்பது: தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, மேம்பட்ட உற்பத்தி, போக்குவரத்து ஆகிய முக்கிய துறைகளில் தற்போதைய ஹெச்-1பி பணியாளர்களின் திறனை மேம்படுத்தவும், புதிய தலைமுறை பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலானது தொழிலாளர் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமன்றி, கல்வித் துறையில் எவ்வாறு பயிற்சியளிப்பது என பயிற்சியளிப்பவர்கள், பணி வழங்குபவர்களை சிந்திக்க வைத்துள்ளது. 

இந்த மானியத் திட்டத்தின் கீழ், தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிர்வாகமானது பயிற்சிக்கு தேவையான நிதி உள்ளிட்டவற்றை வழங்குவது குறித்து ஒரு வழிகாட்டுதலை வழங்கும். 

உள்ளூர் பொது-தனியார் கூட்டு மூலம் மானியதாரர்கள் முக்கிய துறைகளில் ஹெச்-1பி பணிகளுக்குத் தேவையான நடுத்தர முதல் உயர் திறன் வரையிலான பயிற்சியை அளிக்க இந்த நிதியைப் பயன்படுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்-1பி விசாவானது குடியேற்ற உரிமை அல்லாத விசாவாகும். தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் பணிகளில் வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசா மூலமே அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றன. 

ஆண்டுதோறும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை வழங்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாவையே நம்பியுள்ளன. இந்நிலையில், ஹெச்}1பி பணிகள் அமெரிக்கர்களுக்கும் அதிகளவில் கிடைக்கும் வகையில் இந்த அறிவிப்பை அந்நாட்டின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT