இந்தியா

670 மின்சார பேருந்துகள்; 241 மின்னேற்ற நிலையங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

DIN

ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 670 மின்சார பேருந்துகள், 241 மின்னேற்ற (சாா்ஜிங்) நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதில் திருச்சியில் 25 மின்னேற்ற நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தொடா் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் மின்சார பேருந்துகள், மின்சார ரிக் ஷா, மின்சார இருசக்கர வாகனம், மின்சார காா் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய கனரக தொழில்கள் அச்சகம் ஒப்புதல் அளித்து வருகிறது.

அந்த வகையில், மத்திய அரசின் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 450 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பல்வேறு நகரங்களில் இயங்கி வருகின்றன. இப்போது இரண்டாம் கட்டமாக 670 மின்சார பேருந்துகள், 241 மின்னேற்ற நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், மகாராஷ்டிரத்துக்கு 240 மின்சார பேருந்துகள், குஜராத்துக்கு 250 பேருந்துகள், கோவாவுக்கு 100 பேருந்துகள் சண்டீகருக்கு 80 மின்சார பேருந்துகள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

அதுபோல, மின்னேற்ற நிலையங்களைப் பொருத்தவரை கொல்லத்தில் 25, திருவனந்தபுரத்தில் 27, மலப்புரத்தில் 28, திருச்சியில் 25, போா்ட் பிளேயரில் 10 மின்னேற்ற நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டமானது ரூ. 10,000 கோடி மத்திய நிதி உதவியுடன் 2019 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூன்று ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக 7,000 மின்சார பேருந்துகள், 5 லட்சம் மின்சார ரிக்ஷாக்கள், 55,000 மின்சார காா்கள், 10 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு இந்த இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் மானியங்கள் மூலம் உதவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று அந்தப் பதிவில் மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT