இந்தியா

தாணே மாவட்டத்தில் மேலும் 1,749 பேருக்குத் தொற்று: 35 பேர் பலி

25th Sep 2020 11:12 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் இன்று புதிதாக 1,749 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 1,65,343 ஆகக் உயர்ந்துள்ளது. 

சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய கரோனா நிலவரப்படி..

கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,269 ஆக உயர்ந்துள்ளது.  

ADVERTISEMENT

அதிகபட்ச பாதிப்புகளில், கல்யாண் நகரத்தில் 40,410 பேரும், தாணே நகரத்திலிருந்து 34,379 பேரும், நவி மும்பையிலிருந்து 34,499 பேரும், மீரா பயாண்டரின் 17,309 ஆகவும் உள்ளது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது வரை 86,51 சதவீதம் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இறப்பு விகிதம் 2.58 சதவீதம் ஆக உள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT