இந்தியா

அனைத்து வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் ஓய்ந்துவிட்டது: பிரதமர் மோடி இரங்கல்

25th Sep 2020 03:05 PM

ADVERTISEMENT

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய 'பாடும் நிலா' பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  வெள்ளிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 

ஸ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் துரதிர்ஷ்டவசமான மறைவினால் இந்த இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக அனைத்து வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் ஓய்ந்துவிட்டது. அவரது  குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி' எனப் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

Tags : SPB
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT