இந்தியா

எஸ்.பி.பி. மறைவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா இரங்கல்

25th Sep 2020 06:22 PM

ADVERTISEMENT

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு குணமானபின் உடல்நிலை சிக்கலால் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை மறைந்தார். அவரின் மறைவிற்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில், “எஸ்பி..பி.யின் குரல் தலைமுறைகளைத் தாண்டி நினைவில் இருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT