இந்தியா

கரோனா பரிசோதனையில் புதிய உச்சம் தொட்டது இந்தியா

25th Sep 2020 02:54 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: முதல் முறையாக, ஒரே நாளில் சுமார் 15 லட்சம் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு இதுவரை எட்டாத இலக்காக புதிய உச்சத்தை தொட்டுள்ளது இந்தியா.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முதல் முறையாக ஒரே நாளில் சுமார் 15 லட்சம் கரோனா பரிசோதனை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 14,92,409 பரிசோதனைகள் செய்யப்பட்டது. கரோனா பேரிடைர் தொடங்கியது முதல் இது வரை மொத்தம் சுமார் 7 கோடி (6,89,28,440) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் பரிசோதனை கட்டமைப்பு அதிகரித்துள்ளதை, இந்த பரிசோதனை எண்ணிக்கை உயர்வு காட்டுகிறது.

ADVERTISEMENT

கடைசி 1 கோடி பரிசோதனைகள் மட்டும் வெறும் 9 நாளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 லட்சம் மக்களுக்கான பரிசோதனை, இன்று 49,948 என்ற அளவில் உள்ளது. அதிகளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதிகளவில் பரிசோதனை செய்யும் மாநிலங்களில், பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

நாட்டின் மொத்த பாதிப்பு அளவு இன்று 8.44 சதவீதமாக உள்ளது. பரிசோதனை கட்டமைப்பு விரிவாக்கத்தால், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தினந்தோறும் பரிசோதனைகள் அதிகரித்துள்ளன. 23 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பத்து லட்சம் பேருக்கான பரிசோதனை தேசிய சராசரிய அளவை விட (49,948) அதிகமாக உள்ளது.

இன்று நாட்டில் மொத்தம் 1818 பரிசோதனை கூடங்கள் உள்ளன. இவற்றில் 1084 அரசுத்துறை. 734 தனியார் துறையைச் சேர்ந்தது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT