இந்தியா

'விவசாயிகளுக்கு புரியாத வகையில் முந்தைய ஆட்சி சட்டங்கள்'

25th Sep 2020 01:28 PM

ADVERTISEMENT

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள முடியாதவகையில் முந்தையை காங்கிரஸ் கட்சி திட்டங்களை வகுத்து வைத்திருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக அரசின் திட்டங்களுக்கு எதிராக இணையதளத்தில் பரப்பப்படும் பொய்கள் மற்றும் வதந்திகளை தடுக்கும் விதமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து காணொலி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள முடியாதவகையில் காங்கிரஸ் கட்சியின் திட்டங்கள் இருந்தன. எனினும் பா.ஜ.க. அரசு அதனை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனையொட்டி பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் விவசாய சீர்திருத்த மசோதாவின் முக்கியத்துவத்தையும், சிக்கல்களையும் விவசாயிகளுக்கு புரியும் வகையில் அவர்களது மொழியில் எடுத்துரைக்க வேண்டும். இது இணையதளத்தில் விவசாய திட்டங்களுக்கு எதிராக பகிரப்படும் தகவர்களுக்கு எதிராக அமைய வேண்டும்.

ADVERTISEMENT

புதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் நமது தொழிலாளர் சக்தியின் வாழ்க்கையை மாற்றும். குறைந்தபட்ச ஊதிய திட்டத்தின் கீழ் 30 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பயன்பெற்று வருகின்றனர். இது அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சென்று சேரும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Tags : நரேந்திர மோடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT