இந்தியா

கரோனா பாதித்த தில்லி துணை முதல்வருக்கு பிளாஸ்மா சிகிச்சை

25th Sep 2020 09:10 PM

ADVERTISEMENT

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்று பாதித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த மணீஷ் சிசோடியாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால், உடனடியாக தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் செப்டம்பர் 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

பின் தில்லி மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  அங்கு அவர் தற்போது கரோனா வைரஸ் மற்றும் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மணீஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசாங்கத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது அமைச்சர் ஆவார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT