இந்தியா

உள்ளூர் விமான சேவையைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 1 கோடி: ஹர்தீப் சிங்

25th Sep 2020 05:53 PM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உள்ளூர் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 1 கோடி பேர் பயணித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மே 25-ம் தேதி முதல் இயக்கப்பட்ட உள்ளூர் விமான சேவைக்கு இதுவரை 1,08,210 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் கரோனா பொது முடக்கத்துக்கு முன்பிருந்ததைப் போன்ற வழக்கமான எண்ணிக்கையை நோக்கி உள்ளூர் விமான சேவை முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் 25ம் தேதி நிறுத்தப்பட்ட விமானப் போக்குவரத்து, மே 25-ம் தேதி தொடங்கி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.

Tags : air india coronavirus lockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT