இந்தியா

விவசாயிகள் போராட்டம்: உ.பி. - தில்லி எல்லையில் காவலர்கள் குவிப்பு

25th Sep 2020 03:12 PM

ADVERTISEMENT

நொய்டா: விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா சாலையில் விவசாயிகள் கூடியதால், அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லி விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா சாலையில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் குவிந்தனர். தில்லி நோக்கி பேரணியாக சென்ற போது கெளதம் புத்தா நகர் காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.

இந்திய உழவர் சங்கத்தினர் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோதும், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுடன் இன்று நொய்டா எல்லைப் பகுதியில் அவர்கள் திரண்டனர்.

ADVERTISEMENT

மூன்று மசோதாக்களையும் திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags : விவசாய மசோதா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT