இந்தியா

விவசாய மசோதாக்கள்: சொந்த கட்சிக்கு எதிராகத் திரும்பும் ஹரியாணா பாஜக தலைவர்கள்

25th Sep 2020 06:00 PM

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களுக்கு ஹரியாணா மாநில பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

மத்திய அரசு இந்த வாரத் தொடக்கத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு நாடுமுழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் தொடங்கி விவசாயிகள் என பலதரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹரியாணா மாநில பாஜக தலைவர்களான பர்மிந்தர் சிங் துல் மற்றும் ராம்பால் மஜ்ரா ஆகியோர் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சொந்த கட்சியான பாஜகவையே விமர்சித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள துல், ஹரியாணா மற்றும் பஞ்சாபின் மொத்த சந்தை முறை நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவை பலவீனமடைந்தால் விவசாயிகள் எங்கு செல்வார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

விவசாயிகளுக்கு விரோதமான மசோதாக்கள் இவை. விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்த அவர்களின் அச்சம் நியாயமானது. மத்திய அரசு விவசாயிகளின் குரல்களையும் கேட்க வேண்டும். என துல் குறிப்பிட்டுள்ளார்.

"பாஜக விவசாயிகளின் குரலைக் கேட்க வேண்டும். இந்த விவசாய எதிர்ப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்," என்று மஜ்ரா தெரிவித்தார்.

விவசாய மசோதாக்கள் விவகாரத்தில் சொந்த கட்சி தலைவர்களே பாஜகவை விமர்சிப்பது பாஜக தலைமைக்கு நெருக்கடியைத் தந்துள்ளது.

Tags : Farmers bill 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT