இந்தியா

தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு திட்டத்தில் புதிதாக 7.41 லட்சம் பேர்

25th Sep 2020 06:21 PM

ADVERTISEMENT


புது தில்லி: கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு (இஎஸ்ஐ) திட்டத்தில் புதிதாக 7.41 லட்சம் பயனாளர்கள் இணைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டத்தில் புதிதாக 7.41 லட்சம் பேர் இணைந்திருப்பதாகவும், இதைவிட கூடுதலாக, அதற்கு முந்தைய மாதம் 8.13 லட்சம் பேர் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இது வெறும் 2.6 லட்சமாகவும் மே மாதத்தில் 4.81 லட்சமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Tags : india news
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT