இந்தியா

அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் தில்லி முதல்வர் கேஜரிவால் சந்திப்பு

25th Sep 2020 12:41 PM

ADVERTISEMENT

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் குறித்து சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் விவசாய நிலங்களுக்கு திரவ உரங்களை உற்பத்தி செய்யும் வகையில் மூலப்பொருள்களை சிதைவுறச் செய்து திரவ உரத்தை தயாரிக்கும் வகையில் மிகக்குறைந்த விலையில் புதிய சாதனம் கண்டறியப்பட்டுள்ளது.

சில வெல்லம் மற்றும் சுண்டல் மாவு கொண்டு விளைநிலங்களுக்கு தெளிக்கும் வகையில் 25 லிட்டர் கரைசல் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு போதுமானது.

இதனைத்தெளிப்பதன் மூலம் பயிர் எச்சம் சுமார் 20 நாட்களில் மென்மையாகி இயற்கையான முறையில் அழுகும். இது உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மண்ணின் வளத்தை அதிகரிக்கிறது. 

ADVERTISEMENT

இதனை நேரில் பார்வையிட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT