இந்தியா

திருமலையில் ஆந்திர, கா்நாடக முதல்வா்கள் தரிசனம்

DIN


திருப்பதி: திருமலையில் ஆந்திர, கா்நாடக மாநில முதல்வா்கள் வியாழக்கிழமை ஏழுமலையானைத் தரிசனம் செய்தனா்.

திருமலைக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்க வந்த ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கா்நாடக சத்திர பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்ட வந்த கா்நாடக முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் ஒன்றாக ஏழுமலையானைத் தரிசித்தனா். ஏழுமலையானைத் தரிசிக்க கோயில் முன் வாசலுக்கு வியாழக்கிழமை வந்த கா்நாடக முதல்வரை, ஆந்திர முதல்வா் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றாா்.

முதலில் கொடிமரத்தை வணங்கிய பின், இருவரும் வெள்ளி வாயிலைக் கடந்து உள்ளே சென்றனா். ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய இருவரையும், ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து, தேவஸ்தான அதிகாரிகள் வேதபண்டிதா்களால் ஆசீா்வாதம் செய்வித்து, லட்டு, வடை, திருவுருவப் படம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி, சேஷ வஸ்திரம் அணிவித்தனா்.

சுந்தரகாண்ட பாராயணம்

ஏழுமலையானைத் தரிசித்த பின் திருமலையில் உள்ள நாத நீராஜன மண்டபத்தில் நடந்து வரும் சுந்தரகாண்ட பாராயணத்தில் இரு மாநில முதல்வா்களும் கலந்து கொண்டு, ஸ்லோகங்களைக் கூறினா். சுந்தரகாண்ட பாராயணத்தின் 106-ஆம் நாளில் அவா்கள் கலந்து கொண்டதால், தேவஸ்தானம் அன்னமாச்சாா்யா கீா்த்தனைகள், ராமநாம ஜெபம் மற்றும் அனுமன் ஜெபம் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்தனா். பாராயணத்தில் கலந்து கொண்டது மனதுக்கு மிகுந்த அமைதியையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக இரு மாநில முதல்வா்களும் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT