இந்தியா

'வேளாண் மசோதா செயல்படுத்தப்படாது என்பதை உறுதி செய்யவும்'

25th Sep 2020 05:27 PM

ADVERTISEMENT

பஞ்சாபில் வேளாண் மசோதா செயல்படுத்தப்படாது என்பதை முதல்வர் அம்ரீந்தர் சிங் உறுதி செய்ய வேண்டும் என்று சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் கபீர் சிங் பாதல் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்த சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதனை சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் கபீர் சிங் பாதல் தொடக்கி வைத்தார்.

இதில் பேசிய அவர், ''பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் மசோதாக்களும் மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், இரண்டாம் உலகப் போரின்போது ஒரு அணு குண்டின் மூலம் ஜப்பானை அமெரிக்கா உலுக்கியது. அதேபோன்று ஒரு சிரோமணி அகாலிதளத்தின் ஒரு அமைச்சரவை உறுப்பினர் (ஹர்சிம்ரத் கவுர் பாதல்) ராஜிநாமா மூலம் மோடி அதிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் குறித்து ஒருவார்த்தை கூட பேசாத நிலையில், தற்போது 5 அமைச்சர்கள் வரை விவசாயிகள் குறித்து பேசத் துவங்கியுள்ளனர்'' இவ்வாறு கபீர் சிங் பாதல் கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT