இந்தியா

கேரளத்தில் குழந்தையை ஆற்றில் வீசிக் கொன்ற தந்தை கைது

25th Sep 2020 12:56 PM

ADVERTISEMENT

கேரளத்தில் பிறந்து 40 நாள்களே ஆன குழந்தையை தந்தையே ஆற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவல்லம் அருகே உள்ள பச்சலூர் பகுதியை சேர்ந்த உன்னிக்கிருஷ்ணன் (26) என்பவர் பிறந்து 40 நாள்களே ஆன ஆண் குழந்தையை ஆற்றில் வீசிக் கொன்றுள்ளார்.

குழந்தையின் பெயர்சூட்டு விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிலையில் குழந்தையை அவரது தந்தை கொன்றுள்ளார்.

இதனையடுத்து தந்தையை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து பேசிய காவல்துறையினர், குழந்தையின் பெற்றோரிடையே பிரச்சனை நிலவுவதாகக் கூறினர். குழந்தையின் தாயிற்கு வேறொரு திருமணம் நடைபெற்று ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில், பிறந்து 40 நாள்களே ஆன குழந்தையின் பெயர்சூட்டு நிகழ்வின்போது குழந்தையை தந்தை தூக்கிச் சென்றுள்ளார்.

குழந்தையை மாலைக்குள் கொண்டுவருவதாக தந்தை தூக்கிச் சென்ற நிலையில், இரவு வரை குழந்தையை கொண்டுவராததால், தாயார் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

உறவினர்கள் அளித்த தகவலின்படி ஆற்றில் தேடும்போது  குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பாக தந்தையிடம் காவல்துறையினர் விசாரணை மேகொண்டுள்ளனர்.

Tags : கேரளம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT