இந்தியா

உ.பி.: மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பெண் பலி

24th Sep 2020 12:36 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 45 வயது மதிக்கத்தக்க பெண் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

மேலும் அவரது கணவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளில் சிக்கிய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மறுசீரமைப்பு பணியின்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

Tags : உத்தரப்பிரதேசம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT