இந்தியா

மும்பையில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது

DIN

மும்பையில் மழையின் அளவு குறைந்ததால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

மும்பையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் கனமழை பெய்து வந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. 

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. சாலைகளிலும், தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியதால் நேற்று (புதன்கிழமை) சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. 

அரசு அலுவலகங்களுக்கும், தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இதனிடையே நகரின் முக்கிய சாலைகளிலுள்ள நீர் மும்பை மாநகராட்சி சார்பில் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மும்பையில் மழையின் அளவு குறைந்ததால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமையில் மும்பையில் அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT