இந்தியா

பஞ்சாப்: தண்டவாளத்தில் அமர்ந்து போராடும் விவசாயிகள்

24th Sep 2020 12:51 PM

ADVERTISEMENT

வேளாண் சீர்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் 3 நாள்கள் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய தொழிலாளர் குழு சார்பில் நடைபெறும் இந்த மறியல் போராட்டம் இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் பெரோஷ்பூர் ரயில்வே பிரிவு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளின் போராட்டத்தால் செப்டம்பர் 24 முதல் 26-ஆம் தேதி வரை 14 இணை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேதத்தை தவிர்க்கும் நோக்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : வேளாண் மசோதா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT