இந்தியா

தில்லி வன்முறை: குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட சல்மான் குர்ஷித், பிருந்தா காரத்

DIN

புதுதில்லியில் நடந்த வன்முறை சம்பவ குற்றப்பத்திரிக்கையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித், மார்க்சிஸ்ட் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 580க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.  இது நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இஸ்ஸாமியர்களை குறி வைத்து இந்தக் கலவரம் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக குற்றம் சாட்டின.

தில்லி கலவரம் தொடர்பாக புதுதில்லி காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தில்லியில் நடைபெற்ற கலவரத்தை தடுக்க மத்திய அரசும், காவல்துறையும் தவறி விட்டதாக உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டியது.

இந்நிலையில் தில்லி காவல்துறை சார்பில் வன்முறை சம்பவம் தொடர்பாக 17 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் மற்றும்  பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT