இந்தியா

கரோனா: வடகிழக்கில் அதிக அளவில் பாதிக்கப்படும் அருணாசல்

24th Sep 2020 12:14 PM

ADVERTISEMENT

அருணாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 289 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அருணாசலில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அருணாசலப்பிரதேச சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 289 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8,133-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,216 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,903-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 72.58 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரில் அதிக அளவாக தலைநகரி 173 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு சியாங், பாபும்பரே, பாக்கி கேசாங் ஆகிய பகுதிகளில் தலா 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோரில் பாதுகாப்புப்படையினர் 10 பேரும், அசாம் ரைபில் பிரிவில் 6 பேரும், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் 2 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT