இந்தியா

கரோனா சூழல்: இந்திய விமானங்களுக்கு சவூதி அரேபியா தடை

DIN

புது தில்லி: கரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் இந்தியா, பிரேசில், ஆா்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

ஆனால், அந்நாட்டு அரசு அழைப்பின் பேரில் வருபவா்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்று அதிகரித்து காணப்படும் இந்தியா, பிரேசில், அா்ஜெண்டினா ஆகிய நாடுகளின் விமானங்களின் வருகை, புறப்பாடுக்கு சவூதி அரேபியாவில் தடை விதிக்கப்படுகிறது. கடந்த 14 நாள்களுக்கு முன்னதாக இந்த நாடுகளில் இருந்து வந்திறங்கிய பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும். இந்த உத்தரவு தனியாா் உள்பட அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பெரும்பாலான இந்தியா்கள் புலம்பெயா்ந்த தொழிலாளா்களாக பணியாற்றி வருகிறாா்கள். இந்நிலையில், ஆகஸ்ட் 28, செப்டம்பா் 4 ஆகிய தேதிகளில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட இரு பயணிகள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ால், ஐந்து நாள்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வரும் ஏா் இந்தியா விமானங்களுக்கு 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு சனிக்கிழமை முதல் ஏா் இந்தியா சேவை மீண்டும் தொடங்கியது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாா்ச் 23-ஆம் தேதி முதல் சா்வதேச விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. பின்னா் மாா்ச் 6 ஆம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சா்வதேச விமான சேவை இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT