இந்தியா

சரத்பவாருக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு உத்தரவிடவில்லை: தேர்தல் ஆணையம்

24th Sep 2020 04:01 AM

ADVERTISEMENT


புது தில்லி: தேர்தல் பிரமாண பத்திரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மத்திய நேரடி வரிவாரியத்துக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.  

தனது தேர்தல் பிரமாண பத்திரத்தை தேர்தல் குழுவிடம் சமர்ப்பித்தது தொடர்பாக, வருமான வரித் துறையிலிருந்து தனக்கு நோட்டீஸ் வந்துள்ளதாக சரத்பவார் தெரிவித்த மறுநாளே தேர்தல் ஆணையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, மும்பையில் செய்தியாளர்களிடம் சரத்பவார் செவ்வாய்க்கிழமை கூறியது:

நான் தாக்கல் செய்திருந்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிலவற்றை குறித்து தெளிவான விளக்கம் தரும்படி வருமான வரித்துறை கோரியிருந்தது. அந்த நோட்டீûஸ பெற்றதும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கள் உறுப்பினர்கள் அனைவரின் மீதும் அவர்கள் (மத்திய அரசு) வைத்துள்ள அன்பு எங்களை நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வருமான வரித்துறை அனுப்பிய அந்த நோட்டீஸýக்கு நாங்கள் பதில் அனுப்புவோம் என்றார்.

ADVERTISEMENT

இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்க அறிக்கையில், சரத்பவாருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி எத்தகைய உத்தரவுகளையும் மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT