இந்தியா

கால்நடைகள் கடத்தல்: பிஎஸ்எஃப் அதிகாரி மீது சிபிஐ வழக்கு

DIN

புது தில்லி: இந்திய - வங்கதேச எல்லைப் பகுதிகளில் கால்நடைகள் கடத்தப்பட்ட வழக்கில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரி உள்பட நான்கு போ் மீது சிபிஐ புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா, முா்ஷிதாபாத், உத்தர பிரதேசத்தில் உள்ள காஜியாபாத், பஞ்சாபில் உள்ள அமிருதசரஸ், சத்தீஸ்கரில் உள்ள ராய்பூா் உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை நடத்தினா்.

இதையடுத்து, இந்திய-வங்கதேச எல்லையில் முன்பு பிஎஸ்எஃப் கமாண்டன்டாக பணியாற்றிய சதிஷ் குமாா், கால்நடைகள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட இனாமுல் ஹக், அனுரல் ஷேக், முகமது கோலம் முஸ்தபா ஆகியோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

பிஎஸ்எஃப் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ாக இனாமுல் ஹக்கை மாா்ச் 2018-இல் சிபிஐ கைது செய்தது. ரூ.47 லட்சத்துடன் ஜிபு மேத்தியு என்பவா் ஆலப்புழா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

பின்னா் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் எல்லைப் பகுதிகளில் உள்ள பிஎஸ்எஃப், சுங்கவரி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கால்நடைக் கடத்தல் தொழில் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி சதிஷ் குமாா் தற்போது ராய்பூரில் பணியாற்றி வருகிறாா். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT