இந்தியா

அண்டை நாடுகளுடனான நட்புறவை மத்திய அரசு சீரழித்துவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

24th Sep 2020 02:49 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: அண்டை நாடுகளுடன் இந்தியாவுக்கு இருந்த நட்புறவை மத்திய அரசு சீரழித்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

‘வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு மோசமடைந்து வருகிறது. அதேநேரம் வங்கதேசத்துக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு வலுப்பெற்று வருகிறது’ என்று ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

அண்டை நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே காங்கிரஸ் கட்சி உருவாக்கி, பல ஆண்டுகளாக காத்துவந்த நட்புறவை, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு சீரழித்து விட்டது. அண்டை நாடுகளோடு நட்புடன் இல்லாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது என்று அந்தப் பதிவில் அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT