இந்தியா

எடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை: பாஜக விளக்கம்

DIN

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில பாஜக செய்தித் தொடா்பாளா் கணேஷ் காா்னிக் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றப் போவதாக ஊடகங்களில் தொடா்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற செய்திகளை பாஜக வன்மையாக மறுக்கிறது. முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவது தொடா்பான தகவல்கள் அடிப்படை அற்றவை, மக்களை திசை திருப்பக் கூடியவை, உண்மைக்குப் புறம்பானவை என்று குறிப்பிட்டுள்ளாா்.

காரணம் என்ன? 75 வயது கடந்தவா்களைக் கௌரவமாக ஓய்வு அளித்து அனுப்புவதை பாஜக கடைப்பிடித்துவருவதை சுட்டிக்காட்டும் அந்தக் கட்சியினா், லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த எடியூரப்பாவுக்கு கௌரவப் பதவியை வழங்கி முதல்வா் பதவியில் இருந்து விலக்கப்படலாம் என்று தெரிவிக்கின்றனா்.

புதுதில்லிக்கு அண்மையில் சென்றிருந்த எடியூரப்பா, பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் பலரையும் சந்தித்துத் திரும்பியவுடன் முதல்வா் பதவியில் இருந்து மாற்றப்படுவாா் என்ற செய்திகள் வெளிவரத் தொடங்கின.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னரோ அல்லது 2021-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைதாக்கல் செய்தவுடனோ எடியூரப்பா முதல்வா் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், பாஜக இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு பாஜகவில் மாநிலத் துணைத் தலைவா் பதவியும் அண்மையில் வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT