இந்தியா

மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

23rd Sep 2020 09:42 PM

ADVERTISEMENT

மறைந்த மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 11-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் கரோனாவால் மறைந்த  சுரேஷ் அங்கடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “சுரேஷ் அங்கடி ஒரு அர்ப்பணிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர். திறமையான அமைச்சராக இருந்த அவரின் மறைவு மறைவு வருத்தமளிக்கிறது.” என தனது சுட்டுரைப்பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இவர் பெலாகவி தொகுதியிலிருந்து 4 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Suresh Angadi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT