இந்தியா

மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்னதாகவே முடிவு

23rd Sep 2020 02:27 PM

ADVERTISEMENT

மாநிலங்களவை குளிர்கால கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு ஒத்திவைத்தார். 


கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்பட பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.  

நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அது குறித்த விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன.

ADVERTISEMENT

அந்தவகையில் கடந்த கடைசி 2 நாள்களில் 14 மசோதாக்கள் என 10 நாள்களில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

எனினும் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதாக்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் (புதன்கிழமை) அவையை புறக்கணித்து உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்டோபர் 1-ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் குளிர்கால கூட்டத்தொடர் முன்னதாகவே நிறைவுபெற்றது.

Tags : மாநிலங்களவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT